Friday, October 4, 2013

மட்டற்ற மகிழ்ச்சி

             திருமணம் முடிந்து ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டது..... நான்கு வயதில் ஒரு அழகான பெண் குழந்தைக்கு தாய்........ மீண்டும் தற்போது கருவுற்றிருக்கிறேன்... இதை உறுதி செய்தது ஜுலை16 அதிகாலை 3:30 மணிக்கு. கணவன் நல்ல உறக்கத்தில் இருந்தார் எழுப்பவில்லை, அதற்கு பதில் அவர் கைபேசிக்கு செய்தி அனுப்பிவிட்டு உறங்கினேன்............. 

            காலை 6:30க்கு அவர் கைபேசியில் அலாறம் அடித்தது என் காதில் கேட்டது ஆனால் கண்கள் திறக்க முடியாத உறக்கம், தூக்கம் கலைந்த என் கணவர் அன்று பார்த்த முதல் நல்ல செய்தி தான் இரண்டாவதாக அப்பா ஆகப்போகும் அந்த நல்ல செய்தி, படித்ததும் உறங்கிய என்னை தொந்தரவு செய்யாமல் என் தலையை தடவி என் கன்னத்தில் ஒரு அன்பான குட்டி முத்தமிட்டு எழுந்தார், அடுத்த நொடியே நான் கண் விழித்தேன்........... 

           இதை இங்கு பதிய காரணம் கேட்கலாம்...... இவ்வுலகில் எதயும் எதிர்பாராமல் கணவன்,மனைவிக்கு இடையில் கிடைக்கும் விலை மதிப்பிலாத சந்தோஷம்,புதிதாய் வரப்போகும் அந்த பூந்தளிரால் தானே!!!!!!  

Wednesday, June 19, 2013

ரயில் பயணம்

ஜுன்15 2013

                  ஒரு அரசாங்க பணிக்காக தேர்வு எழுத சென்றேன், எனக்கு பிடித்த என்னவனுடன்.... அவனை பார்வையால் ரசித்த படி என் மொபைல் போனில் டைப் செய்த சில வரிகள் இங்கே பகிர்வதில் ஒரு சிறிய ஆனந்தம்......


            "இணையாமல் போகும் தண்டவாளத்தில் தட தடவென ஓடும் ரயிலில் எதிரே அமர்ந்திருக்கும் உன்னை பார்த்து ரசிக்க என் மனம் தடம் புரலாமல் தவிக்கின்றது"


           "சில மணி நேரம் என் பார்வை என்ற சிறையில் உன்னை அடைத்து வைத்ததர்க்கு நீ கடவுளை வஞ்சிக்கிராய்..... நான் அந்த இடைப்பட்ட நேரத்தில் என் காதலை சுவாசிக்கிறேன் என் பார்வை வழியாக"

          "இன்னும் சற்று நேரத்தில் என் பார்வை சிறையில் இருந்து உனக்கு விடுதலை, என் காதல் சுவாசம் நிர்க்க போகும் நேரம்..... இப்போது நான் வஞ்சிக்கிரேன் அந்த கடவுளை, இந்த பயணம் இன்னும் தொடர கூடாதா என்று"